உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அடிப்படை வசதிகள் ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

அடிப்படை வசதிகள் ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தினமும் இக்கோவிலுக்கு வருகின்றனர். பக்தர்களுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.எனினும், கந்தசுவாமி கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பிரத்யேக அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.அதாவது, சுவாமி தரிசனத்துக்கு தனி வழி அமைக்க வேண்டும். அதேபோல் மருத்துவ உதவி மையம், சரவண பொய்கை குளத்தில் குளிப்பதற்கு தனி இடவசதி, பிரத்யேக கழிப்பறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களை நியமித்தல், ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடப்பதற்கான பயிற்சி உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும், வசதிகளையும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி