உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் - சூணாம்பேடு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

மதுராந்தகம் - சூணாம்பேடு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

சூணாம்பேடு, சூணாம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இல்லீடு, காவனுார், புத்திரன்கோட்டை, நுகும்பல் போன்ற 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், 25,௦௦௦க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தொழிற்சாலை, அலுவலகங்கள், வணிக வளாகங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும், மதுராந்தகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ஆர்.டி.ஓ., அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கி போன்றவை செயல்படுவதால், சூணாம்பேடு பகுதியில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் மதுராந்தகத்திற்கு, பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.சூணாம்பேடு முதல் மதுராந்தகம் வரை, தடம் எண் 'டி-9' ஒரே ஒரு அரசு பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது. இதனால்,காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் போதிய பேருந்து வசதி இல்லாமல், கடும் அவதிப்படுகின்றனர்.பேருந்து பற்றாக்குறையால், விபத்து ஏற்படும் வகையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.திங்கட்கிழமை மதுராந்தகத்தில் வாரச் சந்தை நடப்பதால், திங்கட்கிழமை மாலை நேரத்தில் பேருந்தில் நின்று செல்ல கூட இடம் இல்லாமல், நீண்ட நேரம் தனியார் பேருந்திற்காக காத்திருந்து, பள்ளி குழந்தைகள் இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்லும் சூழல் ஏற்பட்டு உள்ளது.விழாக்காலங்களில் பேருந்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, போக்குவரத்துறை அதிகாரிகள், மதுராந்தகம் - சூணாம்பேடு இடையே கூடுதல் அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை