உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை - தாம்பரம் தடத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

செங்கை - தாம்பரம் தடத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, நீதிமன்றங்கள், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு, தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.செங்கல்பட்டு -- தாம்பரம் வழித்தடத்தில், 40க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில், காலை மற்றும் மாலை நேரங்களில், கூட்ட நெரிசலுடன் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.இது ஒருபுறம் இருக்க, காலை நேரங்களில், ஐந்து பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்படுகின்றன. அதன்பின், அரை மணி நேரம் கழித்து பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மாநகர பேருந்துகளை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும் என, பயணியர், போக்குவரத்து நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.இந்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பேருந்துகளை குறித்த நேரத்தில் இயக்கவும், கூடுதல் பேருந்துகள் இயக்கவும் பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்