உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் விசிறி அமைக்க கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் விசிறி அமைக்க கோரிக்கை

மறைமலை நகர், கூடுவாஞ்சேரி நகராட்சியில் ஜி.எஸ்.டி., சாலை அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றியுள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், மண்ணிவாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரத்த பரிசோதனை, மகப்பேறு, சர்க்கரை நோய்,உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர்.ரத்த பரிசோதனை முடிவுகள் பெரும் இடம், பிரசவ வார்டு பகுதி, கூடுதல் நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களில் முன்புறம் நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் வருவோர் அமர இருக்கைகள் மற்றும் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த அறைகளில் மின் விசிறிகள் இல்லாததால் முதியவர்கள், பெண்கள் என, நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள் போதுமான காற்று வசதி இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.விரைவில் கோடை காலம் துவங்க உள்ளதால் புறநகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் அப்போது மக்கள் மேலும் பாதிப்படையும் நிலை உள்ளது. காத்திருப்போர் அறைகளில் மின் விசிறிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !