உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் அனல்மின் நிலையம் தி.மு.க., வாக்குறுதியில் மிஸ்ஸிங்

செய்யூர் அனல்மின் நிலையம் தி.மு.க., வாக்குறுதியில் மிஸ்ஸிங்

மாமல்லபுரம்:செய்யூர் அனல் மின் நிலையம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படாதது, வாக்காளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில், தேசிய அனல் மின் கழகம் சார்பில், 4,000 மெ.வா., மின்திறனில், அல்ட்ரா அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை, 20 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது.ஆனால், எவ்விதமுன்னேற்றமும் இன்றி, கிடப்பில் உள்ளது.கல்பாக்கத்தில், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்டவை இயங்குகின்றன. அவற்றின் கடைநிலை பணிகள் வேலை வாய்ப்பில், சுற்றுப்புற பகுதியினருக்கு முன்னுரிமை அளிக்க, தொடர்ந்துவலியுறுத்தப்பட்டுவருகிறது.செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரத்திற்கு ரயில் பாதை அமைப்பது, சிறுசேரி வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் தடத்தை மாமல்லபுரம் வரை நீட்டிப்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளும் உள்ளன.மீனவ மக்களை பழங்குடியினராக அறிவிக்குமாறு, அவர்கள் வலியுறுத்திய கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.இவை போன்றமுக்கிய திட்டங்கள்பற்றிய அறிவிப்பு, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இல்லாதது, இப்பகுதிமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை