உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் டாஸ்மாக்கில் ஐபோனுடன் ஸ்கூட்டர் திருட்டு

திருப்போரூர் டாஸ்மாக்கில் ஐபோனுடன் ஸ்கூட்டர் திருட்டு

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கதிரவன், 20, இவர், நேற்று முன்தினம், ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில், திருப்போரூர் - -செங்கல்பட்டு சாலை, வெங்கூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பைக்கின் பெட்டியில், ஐபோன் மற்றும் ரெட்மி ஆகிய இரண்டு மொபைல் போன்களை வைத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின், திரும்பி வந்தபோது இருசக்கர வாகனம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். திருப்போரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படிபோலீசார் விசாரிக்கின்றனர். l சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொளத்துார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வரதன், 48.இவர், நேற்று காலை, சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகில் உள்ள வி.ஐ.பி., நகரில், தனது ஸ்பிளண்டர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, மின்சார ரயிலில் சென்னை சென்றார். மாலையில், மீண்டும் வந்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து, வரதன் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.புறநகர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி