உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள்கோவிலில் கழிவுநீர் பிரச்னை ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியம்

சிங்கபெருமாள்கோவிலில் கழிவுநீர் பிரச்னை ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியம்

சிங்கபெருமாள்கோவில்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக கட்டடங்கள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள் உள்ளன.மேலும் புகழ்பெற்ற பழமையான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. சிங்கபெருமாள்கோவிலைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, தினமும் வந்து செல்கின்றனர்.இங்கு அனுமந்தபுரம் சாலை -- ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பு மற்றும் மண்டப தெரு சந்திப்புகளின் ஓரம், கழிவுநீர் வழிந்து ஓடி கால்வாயில் தேங்குகிறது.இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் அவதியடைந்து வருகின்றனர்.இதனால், நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து பாதசாரிகள் கூறியதாவது:இந்த வழியாக சிங்கபெருமாள்கோவில் பகுதி மக்கள் மட்டுமின்றி அனுமந்தபுரம், கொண்டமங்கலம், செங்குன்றம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்தோர் தினமும் சென்று வருகின்றனர்.இந்த வழியாக கோவிலுக்குச் செல்வோர் கழிவுநீரை மிதித்துக் கொண்டு கடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தாலும், நிரந்தர தீர்வு காணாமல், கண் துடைப்பாக சில இடங்களில் மட்டும் கால்வாயை சுத்தம் செய்கின்றனர்.மீண்டும் சில நாட்களில் இதே போல கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.தற்போது, கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்று வருவதால், அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை