| ADDED : ஜூன் 15, 2024 10:57 PM
செங்கல்பட்டு:தமிழகத்தில், ஜவுளித்துறை சார்பில் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு, விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:விவசாயத்திற்கு அடுத்தபடியாக, கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலை வாய்ப்பை வழங்குவதில், ஜவுளித்துறையின் பங்கு மிகப்பெரியது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானதாகும்.தமிழக அரசு துணிநுால் துறை, தமிழக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கம் வாயிலாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த பயிற்சியை விரும்புவோர், https;//tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில், தாங்களே பதிவு செய்து பயன்பெறலாம்.மேலும் விபரங்களுக்கு, சேலம் குகை, சங்ககிரி பிரதான சாலை, ஜவுளித்துறை மண்டல துணை இயக்குனர், தொலைபேசி எண்: 0427- 2913006 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.