உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறப்பு கடன் மேளா ரூ.2.28 கோடி உதவி

சிறப்பு கடன் மேளா ரூ.2.28 கோடி உதவி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில், சிறப்பு தொழில் கடன் மேளா, கூடுதல் கலெக்டர் அனாமிகா தலைமையில், நேற்று நடந்தது. இதில், 10 தொழில் நிறுவனங்களிடம் இருந்து 33 கோடி ரூபாய்க்கான கடனுதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், ஐந்து நிறுவனங்களுக்கு 2.28 கோடி ரூபாய் கடனுதவிக்கான காசோலை வழங்கப்பட்டது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் உரிமையாளர்கள், வரும் 6ம் தேதி வரை நடக்கும் சிறப்பு கடன் முகாமில் பங்கேற்று, கடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, ஆய்வு கட்டணத்தில் கொடுக்கப்படும், 50 சதவீத சலுகையை பெற்றுக்கொண்டு பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை