உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எஸ்.ஆர்.எம்., பல்கலை வாலிபாலில் சாம்பியன்

எஸ்.ஆர்.எம்., பல்கலை வாலிபாலில் சாம்பியன்

சென்னை, கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில வாலிபால் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடத்தை பிடித்தது. கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டி, மதுரையில் உள்ள நாடார் மகாஜன சங்கம், வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் கடந்த 23ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.அனைத்து போட்டிகளின் முடிவில், இறுதி 'லீக்' சுற்றில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் கோவை கற்பகம் கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன. அதில், 25 - 22, 25 - 18, 25 - 14 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி பெற்று தங்கம் வென்றது. எஸ்.ஆர்.எம்., வீரர்கள் விக்னேஷ் சிறந்த தடுப்பாளராகவும், சேதன் சிறந்த ஆல் ரவுண்டராகவும் தேர்வாகினர்.மூன்றாம் இடத்தை, மதுரை அமெரிக்கன் கல்லுாரி அணி கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை