மேலும் செய்திகள்
சூரசம்ஹார திருவிழா இன்று தொடக்கம்
06-Nov-2024
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், இன்று ஆறு அசுர பொம்மைகள் முழு உடல் தோற்றத்துடன் வதம் செய்யும் சூரசம்ஹார வைபவம் நடைபெறுகிறது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், இந்தாண்டு சஷ்டி விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரதான விழாவான சூரசம்ஹார வைபவம், இன்று மாலை 6:00 மணிக்கு, கோவில் கிழக்கு முகப்பில் விமரிசையாக நடந்தது.திருப்போரூர் கிழக்கு மாடவீதி வரை விரட்டி சென்று, கெஜமுகன், பானுகோபன், அஜமுகி, தாருகன், சிங்கமுகன் ஆகியோரை, வீரபாகு வேடமணிந்த குழுவினர், சிறுவர்கள் வதம் செய்வர்.கந்தபெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, சூரபத்மனை விரட்டிச்சென்று வதம் செய்வார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தகர்கள் பங்கேற்பர். இதற்கான ஏற்பாடுகள், கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.நேற்று, ஐந்தாம் நாள் உற்சவம் நடந்தது. இதில், காலை 9:00 மணிக்கு, கந்தபெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு உற்சவத்தில் மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து, உற்சவர் கந்தசுவாமிக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது. இரவும் வெள்ளி அன்ன வாகனத்தில், சுவாமி வீதி உலா நடந்தது. அதேபோல், நேற்று முன்தினம் இரவும், பூத வாகனத்தில் கந்தபெருமான் வீதி உலா வந்தார்.
06-Nov-2024