ஊரப்பாக்கத்தில் கழிவுநீர் தேக்கம் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, 11வது வார்டுக்கு உட்பட்ட அபிராம் நகர் இரண்டாவது தெருவில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது.அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:ஊரப்பாக்கம் அபிராம் நகர் பகுதியில், ஒரு மாதத்திற்கும் மேலாக, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லை அதிகரித்துள்ளது.இது குறித்து, 11-வது வார்டு கவுன்சிலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஒரு மாதத்திற்கும் மேலாக, கழிவுநீர் தெருவில் தேங்கி துர்நாற்றம் வீசும் கழிவுநீரை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.