உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஒழுகும் கிராம நிர்வாக அலுவலகம் தார்ப்பாய் கட்டி மூடியுள்ள அவலம்

ஒழுகும் கிராம நிர்வாக அலுவலகம் தார்ப்பாய் கட்டி மூடியுள்ள அவலம்

செய்யூர், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.எல்லையம்மன்கோவில் -- செய்யூர் செல்லும் சாலை ஓரத்தில், கிராம நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது.நயினார்குப்பம், ஓதியூர், முதலியார்குப்பம், தழுதாளிகுப்பம், முட்டுக்காடு உள்ளிட்ட 5 கிராமங்களின் வருவாய் கணக்குகள், இங்கு பராமரிக்கப்படுகின்றன.இந்த கிராம நிர்வாக அலுவலகம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்படுகிறது.பராமரிப்பின்றி நாளடைவில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, தற்போது இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.மேலும், மழைக்காலங்களில் கட்டடத்தின் உள்ளே தண்ணீர் கசிந்து, நிர்வாகம் சார்ந்த முக்கிய கோப்புகள் அவ்வப்போது சேதம் அடைந்து வருகின்றன.மழைநீர் உள்ளே கசிவதை தடுக்க, கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தின் மேல்தளத்தில், தார்பாய் கட்டி பாதுகாக்கப்பட்டு உள்ளது.எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை