உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலர்கள் மோதல் மூவர் காயம்

டூ - வீலர்கள் மோதல் மூவர் காயம்

மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 50. நேற்று மதியம், தனது டி.வி.எஸ்., எக்ஸெல் இருசக்கர வாகனத்தில், தன் நண்பரான விஜய், 45, என்பவருடன், பரனுார் நோக்கி ஜி.எஸ்.டி., சாலையில் சென்றனர்.ராஜகுளிப்பேட்டை கடவுப்பாதையில் சாலையை கடக்க முயன்ற போது, கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அசோக், 24, என்பவரின் கே.டி.எம்., பைக், ஏழுமலையின் இருசக்கர வாகனத்தில் மோதியது.இதில், மூவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில், ஏழுமலை, விஜய் இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது. அசோக்கிற்க்கு இடது கையில் முறிவு ஏற்பட்டது.சக வாகன ஓட்டிகள் மூவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ