உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதை மாத்திரை விற்ற இருவர் கைது

போதை மாத்திரை விற்ற இருவர் கைது

மதுரவாயல்:மதுரவாயல் பகுதியில், வலி நிவாரண மாத்திரைகளை சட்டவிரோதமாக போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வருவதாக, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இந்நிலையில், மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ், கூவம் ஆற்றின் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர்.அப்போது, அவர்களிடம் டைடால் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய், 24, நெசப்பாக்கம் கிழக்கு வன்னியர் தெருவை சேர்ந்த கார்த்திகேயன், 24, என தெரிந்தது.இவர், வலி நிவாரண மாத்திரைகளை கல்லுாரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளாக விற்பனை செய்தது தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1,800 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 10 ஊசிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ