| ADDED : ஜூலை 02, 2024 10:47 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- காஞ்சி புரம் சாலையில், மேம்பாலம் அருகில் செங்கல் பட்டு நகர போலீசார் நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, அந்த வழியாக வந்த இருவர், போலீசாரின் வாகனத்தை கண்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.அதில், இருவரும் திருமிசை பகுதியை சேர்ந்த அஜித்குமார், 25, அவரது நண்பன் தமிழ்ச்செல்வன், 27, என்பது தெரியவந்தது.இவர்கள், தங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, காரில் செங்கல்பட்டுமற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், இரவு நேரங்களில் ஆடுகளை திருடி வந்தது தெரியவந்தது.மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 16ம் தேதி இரவு, பெரிய நத்தம் பகுதியை சேர்ந்த ஜீவரத்தினம், 66, என்பவர், செங்கல்பட்டு கைலாசநாதர் தெருவில் நடத்திவரும் ஆட்டுபண்ணையில் புகுந்து, ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களது கூட்டாளிகளான பெண் உட்பட மூவரை தேடிவருகின்றனர்.