மேலும் செய்திகள்
வேதகிரீஸ்வரர் சித்திரை விழா நாளை பந்தக்கால்
02-Mar-2025
திருக்கழுக்குன்றம்:ஹிந்து சமய கோவில் உத்சவங்களில், மாசிமக தீர்த்தவாரி உத்சவமாக தீர்த்த குளம், கடல் ஆகிய நீர்நிலைகளில் புனித நீராடுவது குறிப்பிடத்தக்கது. திருக்கழுக்குன்றத்தில், சங்கு தீர்த்த குளத்தில் நீராடும் வேதகிரீஸ்வரர், நேற்று தீர்த்தவாரி உத்சவம் கண்டார்.உத்சவர் சந்திரசேகர், அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன் ஆகியோர், காலை அபிேஷக அலங்காரம் செய்து, கோபுர தரிசனம் கண்டு புறப்பட்டு, மாட வீதிகள் வழியே கடந்து, நண்பகல் சங்கு தீர்த்த குளத்தை அடைந்தனர்.அங்கு தனியாக வந்த அஸ்தராயர் வழிபாட்டைத் தொடர்ந்து, தீர்த்தவாரியாக குளத்தில் புனித நீராடினார்.அப்போது, பக்தர்கள் நீராடி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து மாலை, குளத்து தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், அபிேஷக வழிபாட்டைத் தொடர்ந்து, இரவு வேதகிரீஸ்வரர் வீதியுலா சென்றார்.
02-Mar-2025