உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிளாம்பாக்கம் அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

கிளாம்பாக்கம் அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில், அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.இவர்களுக்கு, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ஊரப்பாக்கம் கிரேட்டர் சிட்டி லயன்ஸ் சங்கம், பிளானட் வாட்டர் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சைலம் நிறுவனம் இணைந்து, சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து, 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வழங்கி, நேற்று துவங்கி வைத்தனர்.நேற்று நடந்த துவக்க விழாவில், அரிமா சங்க நிர்வாகிகள், சைலம் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சாலமன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை