உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்பாக்கம் - கோவளம் இடையே கட்டணமில்லா பஸ் இயக்கப்படுமா?

கல்பாக்கம் - கோவளம் இடையே கட்டணமில்லா பஸ் இயக்கப்படுமா?

மாமல்லபுரம்: கல்பாக்கம் - கோவளம் இடையே, கட்டணமில்லாத பேருந்து இயக்க வேண்டுமென, பெண் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.கல்பாக்கம் - கோவளம் இடையே குன்னத்துார், மணமை, கடம்பாடி, மாமல்லபுரம், தேவனேரி, பட்டிப்புலம், நெம்மேலி, வடநெம்மேலி, திருவிடந்தை ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளிலிருந்து கல்பாக்கம், மாமல்லபுரம், கோவளம் ஆகிய பகுதிகளுக்கு, பெண்கள் உள்ளிட்டோர், கூலி வேலை உள்ளிட்ட வேலைகளுக்குச் செல்கின்றனர்.கல்பாக்கத்திலிருந்து சென்னைக்கு, முன்பு இயக்கப்பட்ட பேருந்துகளில், அவர்கள் சென்றனர். தற்போது புதுச்சேரி - சென்னை அரசு பேருந்துகளில், கூட்ட நெரிசலில் சிரமத்துடன் சென்று அவதிக்குள்ளாகின்றனர்.மாமல்லபுரம் - திருவான்மியூர் இடையே, மாநகர பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பெண்கள் கட்டணமில்லா பேருந்துகள் இல்லை. இதனால், கல்பாக்கம் பணிமனையிலிருந்து, கல்பாக்கம் - கோவளம் இடையே காலை, மாலையில் பெண்கள் கட்டணமில்லா பேருந்து இயக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை