உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிதாக சமுதாய நலக்கூடம் வேடந்தாங்கலில் அமையுமா?

புதிதாக சமுதாய நலக்கூடம் வேடந்தாங்கலில் அமையுமா?

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, வேடந்தாங்கல் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டு சித்தாத்துார், துறையூர், விநாயகநல்லுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களின், இல்ல சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், கருங்குழி, படாளம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.இதனால், பொருளாதார சிக்கலும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய கூடம் விரிசல் அடைந்து, பயன்பாடு இன்றி உள்ளது.எனவே, பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டடம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை