உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மீன் விற்பனை கூடம் பவுஞ்சூரில் அமையுமா?

மீன் விற்பனை கூடம் பவுஞ்சூரில் அமையுமா?

பவுஞ்சூர், : பவுஞ்சூர் பஜார் பகுதியில் மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையோரத்தில், 15க்கும் மேற்பட்ட மீன் கடைகள் இயங்கி வருகின்றன.இங்கு கடலுார், வடப்பட்டினம், தென்பட்டினம் மற்றும் கடலோர கிராம மீனவர்களால், கடலில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.பவுஞ்சூர், கடுகுப்பட்டு, வெளிக்காடு, விழுதமங்கலம் உள்ளிட்ட பகுதி மக்கள், இங்கு விற்பனை செய்யப்படும் கடல்சார் உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.சாலையோரம் அமைக்கப்படும் மீன் கடைகளுக்கு ஊராட்சி வாயிலாக ஏலம் விடப்பட்டு, வாடகை வசூல் செய்யப்படுகிறது. இங்கு முறையான அடிப்படை வசதி மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால் மீன் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அடிப்படை வசதியுடன் கூடிய மீன் விற்பனைக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை