| ADDED : மே 25, 2024 11:36 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் பகுதியில், பொன்விளைந்தகளத்துார் சாலையில், திருக்கழுக்குன்றம் சாலை சந்திப்பிலிருந்து சற்று தொலைவில், குறுகிய கால்வாய் பாலம் உள்ளது. இந்த பாலம், நீண்டகாலத்திற்கு முன் போக்குவரத்திற்கு ஏற்ப மிக குறுகலாக கட்டப்பட்டது. தற்போது பேருந்து, லாரி என, கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.செங்கற்களில் கட்டப்பட்டுள்ள பாலம், தற்போது பலமிழந்தும் வருகிறது. வல்லிபுரம், பூதுார், ஆனுார் உள்ளிட்ட பகுதியினர், இந்த வழியாக செங்கல்பட்டு சென்று வருகின்றனர்.பாலம் இடிந்தால், வல்லிபுரம் - செங்கல்பட்டு போக்குவரத்து முடங்கி, பல கிராமத்தினர் பாதிக்கப்படுவர்.எனவே, நெடுஞ்சாலை துறை பழமையான பாலங்களை இடித்து அகற்றிவிட்டு, புதிய கான்கிரீட் பாலங்கள் கட்டும் நிலையில், இங்கு புதிதாக கட்டாமல் தாமதப்படுத்தி வருகிறது. தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.