உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாணவியை ஏமாற்ற முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

மாணவியை ஏமாற்ற முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்லுாரிஒன்றில் படித்து வருகிறார்.கடந்த மாதம் இவரது மொபைல்போனில்,'ஸ்னாப் சேட்' சமூக வலைதளம் வாயிலாக தொடர்பு கொண்ட நபர், தான் சென்னையைச் சேர்ந்த 25 வயது வாலிபர் எனக் கூறி பேசி உள்ளார்.இதில் நட்பான மாணவி, அவருடன் தொடர்ந்து பேச துவக்கி, தன் புகைப்படங்களை அந்த நபருக்கு பகிர்ந்து உள்ளார். அந்த நபர்,திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மாணவியின் அந்தரங்க புகைப்படங்களையும் கேட்டு வாங்கியதாக கூறப்படுகிறது.நாளடைவில், அந்த நபரின் பேச்சில் சந்தேகமடைந்த மாணவி, பெற்றோரிடம் நடந்ததைகூறி உள்ளார்.இது குறித்து மாணவியின் பெற்றோர், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.மாணவி அளித்த தகவலை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் சென்னை, கொளத்துார் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 38, என்பதும், சென்னை, அண்ணாசாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்தபடி, பகுதி நேரமாக,'பைக் டாக்ஸி' ஓட்டி வந்ததும் தெரிந்தது.இதையடுத்து சுரேஷ் குமாரை, அவரது சொந்த ஊரான அரக்கோணத்தில் போலீசார் கைது செய்தனர்.பின், அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ