உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  100 நாள் வேலை திட்ட பணி பி.டி.ஓ., எச்சரிக்கை

 100 நாள் வேலை திட்ட பணி பி.டி.ஓ., எச்சரிக்கை

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே கூடலுார் ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தில், பொக்லைன் இயந்திரம் மூலமாக, குளம் வெட்டும் பணி நடைபெறுவதாக, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வந்த தகவலை அடுத்து நேரில் சென்று விசாரணை நடத்தினார். அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு கூடலுார் ஊராட்சி உள்ளது.இங்கு, கடந்த மாதம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மேய்க்கால் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், 130 ஏக்கருக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களை வருவாய்த்துறையினர் மீட்டு, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில், 100 நாள் பணியாளர்கள் மூலமாக குளம் வெட்டும் பணி, கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில், குளம் வெட்டும் பணியில், பொக்லைன் இயந்திரம் மூலமாக பணி செய்யப்படுகிறது என, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற ஜெயகுமார், 100 நாள் வேலை திட்டத்தில் குளம் வெட்டும் இடத்தை பார்வையிட்டார். மேலும், 100 நாள் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இயந்திரம் பயன்படுத்தப்படுவது தவறான தகவல் என தெரிந்தது. இதையடுத்து, உண்மைக்குப் புறம்பான பொய் தகவல் பரப்பிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் மனித சக்திகள் மூலமாக மட்டுமே பணி செய்யப்படும், என்று அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை