மேலும் செய்திகள்
சாத்தாங்காடு வளாகத்தில் 136 மனைகள் ஏலம்
17-Oct-2025
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாமில், 136 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், தைலாவரம், வடப்பட்டினம், பூதுார், வாயலுார், மேலையூர், கீரப்பாக்கம் ஆகிய கிராமங்களில், ரேஷன் கார்டு திருத்தம் முகாம் நேற்று நடந்தது. முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட 136 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது, அந்தந்த தாலுகாவில் வட்ட வழங்கல் அலுவலர்கள் பரிசீலனை செய்து, 136 மனுக்களுக்கு உடனடி தீர்வு கண்டனர் என, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
17-Oct-2025