உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடு பூட்டை உடைத்து 15 சவரன் ஆட்டை

வீடு பூட்டை உடைத்து 15 சவரன் ஆட்டை

மறைமலைநகர் மறைமலைநகர் அடுத்த கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 40; மறைமலைநகர் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 28ம் தேதி, குடும்பத்துடன் சிங்கப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். நேற்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.இது குறித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி