15 ரெட்ஸ் ஸ்னுாக்கர்: 32 பேர் தகுதி
சென்னை, மெட்ராஸ் யுனைடெட் கிளப் சார்பில், 'நான் ரேட்டிங்' எனும் தரவரிசை அல்லாத '15 ரெட்ஸ் ஸ்னுாக்கர்' போட்டி, பிராட்வேயில் உள்ள கிளப் வளாகத்தில் நடந்து வருகிறது.போட்டியில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிளப் மற்றும் அகாடமி அணிகளில் இருந்து, 80 வீரர்கள் பங்கேற்றனர். அதில், 32 வீரர்கள் 'நாக் - அவுட்' சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.நேற்று நடந்த, 'நாக் - அவுட்' சுற்றில், மாஸ்டர் மைண்ட் கியூ ஸ்போர்டஸ் அகாடமியின் விஜேந்தர் ராவ், 3 - 1 என்ற கணக்கில், மெட்ராஸ் யுனைடெட் கிளப் வீரர் அமினை தோற்கடித்தார்.கியூ ஸ்போர்ட்ஸ் அகாடமியின் கார்த்திகேயன், 3 - 1 என்ற கணக்கில் சுகுனா விலாஸ் சபாவின் மயங்க் மேத்தாவையும், தியாகராயா நகர் சோஷியல் கிளப்பின் ஹரிஷ், 3 - 0 கணக்கில், கியூ பால் சிட்டியின் சிக்கந்தரையும் வீழ்த்தினர்.மற்றொரு போட்டியில், மெட்ராஸ் யுனைடெட் கிளப் அரவிந்த், 3 - 1 என்ற கணக்கில், கியூ ஜோன் அகாடமியின் குணாலையும், கியூ பால் சிட்டியின் தாதாஜி, 3 - 1 என்ற கணக்கில் தியாகராய நகர் சோஷியல் கிளப்பின் பிரேமை தோற்கடித்தனர். தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் அகாடமியின் பிரதீஷ், 3 - 1 என்ற கணக்கில், கியூ ஜோன் தீலிப் குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.