உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் 19.5 செ.மீ., மழை

செங்கையில் 19.5 செ.மீ., மழை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், தாம்பரம், பல்லாவரம், வண்டலுார், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில், தாழ்வான பகுதியிலிருந்த 487 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.தாம்பரம், குரோம்பேட்டை, முடிச்சூர், கூடுவாஞ்சேரி, மஹாலட்சுமி நகர் உள்ளிட்ட 84 வசிப்பிட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, நெடுஞ்சாலை என, 133 இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன. அவற்றை, போலீசார், தீயணைப்புத்துறை அதிகாரிகள் அகற்றினர். 87 இடங்களில் மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரத்தில், கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. மாமல்லபுரத்தில் 65 இருளர்கள், கொக்கிலமேடு, வாயலுார் ஆகிய பகுதிகளில் தலா 35 பேர், பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிலவேம்பு குடிநீர் வழங்கி, காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.கலெக்டர் அருண்ராஜ், சப் - கலெக்டர் நாராயணசர்மா ஆகியோர், முகாம்களில் தங்கியுள்ள இருளர்களை பார்வையிட்டனர். அப்போது, காணொளி காட்சி வாயிலாக தொடர்புகொண்ட முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், முகாமில் தங்கியுள்ளோருக்கு மதிய உணவு வழங்கினார். மாவட்ட கண்காணிப்பாளர் ராகுல்நாத், மாமல்லபுரம், வாயலுார் பகுதிகளில், புயல் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

ஏரிகள் நிலை

செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில், 54 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகிறது. ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 620 ஏரிகளில், 15 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகிறது.அதுமட்டுமின்றி, 2,512 குளங்களில், 70 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை