மேலும் செய்திகள்
படகு குழாமில் பயணிகள் அவதி
26-Dec-2024
திருப்போரூர்:சென்னை அருகே திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு படகு குழாம் உள்ளது.தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் இந்த படகு குழாமில் விசைப்படகுகள், துடுப்பு படகுகள், வேக படகுகள் என, 30க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன.வார விடுமுறை, கோடை விடுமுறை நாட்களில் இங்கு பொழுதுபோக்குவதற்காக, ஏராளமான சுற்றுலாப் பயணியர் வருகின்றனர். சுற்றுலா பயணியர் வருகையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், 5 கோடி ரூபாய் மதிப்பில், 125 அடி நீளம், 25 அடி அகலத்தில், முட்டுக்காடு படகு குழாமில், இரண்டு அடுக்கு மிதவை உணவக கப்பல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி தரை தளம் முழுதும் குளிர்சாதன வசதியுடனும், முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணியர் மேல் தளத்திலும் அமர்ந்து உணவு உண்டபடி பயணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது.சமையலறை, சேமிப்பு அறை, கழிப்பறை மற்றும் இயந்திர அறையுடன், இந்த மிதவை உணவக கப்பல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கு, 60 குதிரை திறனுடைய இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.இந்த கப்பல், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கொச்சியைச் சேர்ந்த 'கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் சார்பில், தனியார் மற்றும் பொது பங்களிப்பு நிதி வாயிலாக உருவாக்கப்பட்டு உள்ளது.கடந்த ஓராண்டிற்கும் மேலாக இதற்கான கட்டுமான பணிகள், இந்த படகு குழாம் வளாகத்தில் நடைபெற்று வந்தன.தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, நேற்று திறப்பு விழா நடந்தது.சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்று, இந்த மிதவை உணவக கப்பலை, பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.விழாவில் அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Dec-2024