உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 2 கோவிலை உடைத்து பூஜை பொருட்கள் திருட்டு

2 கோவிலை உடைத்து பூஜை பொருட்கள் திருட்டு

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த காவாத்துார் பகுதியில் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பூஜை முடிந்து, கோவில் நிர்வாகி புருஷோத்தம்மன் கோவிலை பூட்டிச் சென்றார்.நேற்று சென்று பார்த்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, குத்து விளக்கு,பித்தளைக்குடம், பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து புருஷோத்தம்மன் சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதே போல அருகே உள்ள தேவாதுார் கிராமத்தில் கந்தபெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.திருட்டு குறித்து சித்தாமூர் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி