உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாடி படியிலிருந்து விழுந்து 2 வயது குழந்தை பலி

மாடி படியிலிருந்து விழுந்து 2 வயது குழந்தை பலி

கூவத்துார்: தென்பட்டினம் கிராமத்தில், வீட்டின் மாடிப்படியில் விளையாடிய 2 வயது பெண் குழந்தை, தவறி விழுந்து உயிரிழந்தது. கூவத்துார் அடுத்த தென்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன், 22; ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் கயல், 2. நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் குழந்தை கயல், வீட்டின் மாடிப்படியில் விளையாடிய போது, கால் தவறி கீழே விழுந்துள்ளது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே குழந்தையை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக சென்னை, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு திவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை, நேற்று அதிகாலை 4:00 மணியளவில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து, கூவத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி