மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
01-Oct-2025
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த கருநிலம் கிராமத்தில், வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். மறைமலை நகர் அடுத்த கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 60; கூலித்தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி, 55. நேற்று காலை தேவேந்திரன் வேலைக்குச் சென்ற நிலையில், கிருஷ்ணவேணியும் சிங்கபெருமாள் கோவிலில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார்.நேற்று மதியம் 1:00 மணியளவில், கிருஷ்ணவேணி வீட்டிற்கு வந்து பார்த்த போது, பின்பக்கம் உள்ள ஜன்னல் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்த தகவலின்படி வந்த மறைமலை நகர் குற்றப்பிரிவு போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
01-Oct-2025