பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்
சென்னை, பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, சூளைமேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுமிரா, 42; தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியை. நேற்று முன்தினம் இரவு, வீட்டு பீரோவில் வைத்திருந்த நகையை சரிபார்த்துள்ளார். அப்போது, 20 சவரன் நகை மாயமானது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த சூளைமேடு போலீசார் அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் வேலைக்காரர்களிடம் விசாரித்து வருகின்றனர்.