உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் திருடிய 3 பேர் கைது

பைக் திருடிய 3 பேர் கைது

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, 'பல்சர்' இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். மதுராந்தகம், மேலவளம்பேட்டை கூட்டுச்சாலை சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு, மதுராந்தகம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை பிடித்தனர். விசாரணையில், மதுரையைச் சேர்ந்த சக்திவேல், 24, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், 25, புதுக்கோட்டையைச் சேர்ந்த மகேந்திரன், 21, என்பது தெரிந்து. இவர்கள், மேளவலம்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடைய 'பல்சர்' இருசக்கர வாகனத்தை திருடி வந்தது தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ