மேலும் செய்திகள்
கார் மோதி 5 பெண்கள் பலி பல்கலைக்கழக மாணவர் கைது
30-Nov-2024
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த, மணமையைச் சேர்ந்த இருளர் சுரேஷ் மகன்கள் திவாகர், தமிழ்வாணன் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, வீட்டு வராண்டாவில் இரண்டு மொபைல் போன்களை சார்ஜில் பொருத்தி விட்டு, உறங்கி கொண்டிருந்தனர். அப்போது திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஆனந்தன் 27, யுவராஜ், 19, சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த அன்பு, 18, ஆகியோர், அப்பகுதிக்கு சென்று திரும்பியபோது, சகோதரர்களின், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை திருடினர். அவர்கள் விழித்து, மூன்று பேரையும் பிடித்து மாமல்லபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
30-Nov-2024