உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரம் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

தாம்பரம்,தாம்பரம் ரயில் நிலையத்தில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட ஒடிஷா வாலிபர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தில் இருந்து, நேற்று முன் தினம் காலை, அந்தியோதயா விரைவு ரயில் தாம்பரம் வந்தது. அதில் வந்த பயணியரின் உடைமைகளை, ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக கருப்பு பையுடன் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது, மூன்று பொட்டலங்களாக, 3 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய். இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர், கடத்தலில் ஈடுபட்ட ஒடிஷாவை சேர்ந்த சுபாஷ் பரிக், 25, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ