உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரியில் 3 ரேஷன் கடைகள் பூமி பூஜையுடன் பணி துவக்கம்

கூடுவாஞ்சேரியில் 3 ரேஷன் கடைகள் பூமி பூஜையுடன் பணி துவக்கம்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி நகராட்சியில், 42 லட்சம் ரூபாய் செலவில், மூன்று புதிய ரேஷன் கடைகளுக்கான கட்டுமான பணி பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது.நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.இதில், நகராட்சிக்கு உட்பட்ட 4, 6 மற்றும் 27-வது வார்டுகளில், புதிய ரேஷன் கடை அமைக்க, பகுதிவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.நகராட்சி சேர்மன் கார்த்திக் வாயிலாக, செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலெட்சுமி கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.அதன்படி, மூன்று வார்டுகளிலும் ரேஷன் கடை அமைக்க, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 42 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.இதையடுத்து, தலா 14 லட்சம் ரூபாய் செலவில், மூன்று வார்டுகளிலும் ரேஷன் கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் துவங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ