உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காயலான் கடையில் தீ விபத்து 3 வாகனங்கள் எரிந்து நாசம்

காயலான் கடையில் தீ விபத்து 3 வாகனங்கள் எரிந்து நாசம்

அனகாபுத்துார்:அனகாபுத்துார், தென்றல் நகரைச் சேர்ந்தவர் ஜெகன் ராஜ், 50. புறவழிச்சாலை அணுகுசாலையில், 'அன்னை ஓல்ட் பிளாஸ்டிக்' என்ற பெயரில், காயலான் கடை, கிடங்கு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டி சென்றார்.இந்த நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில், தீ கிடங்கு முழுதும் கொழுந்துவிட்டு எரிந்தது.மேலும் மளமளவென, கண்ணன் என்பவருக்கு சொந்தமான டிங்கர் ஷாப்பில் பரவி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பழைய கார்கள், ஒரு லோடு ஆட்டோ தீ பற்றி எரிந்தன.தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து, ஐந்து வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, காலை 6:00 மணிக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்தில், மொத்தம் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ