மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 35 மனுக்கள் ஏற்பு
01-Feb-2025
செங்கல்பட்டு,செங்கல்பட்டில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 358 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று, நடந்தது. சப் - கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு, விவசாய நிலப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பி, உடையும் நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும். வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, தொழில் துவங்க வங்கி கடன், தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 358 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.அதன் பின், மேலக்கோட்டையூர் முதன்மை நிலை விளையாட்டு விடுதியில் தங்கி, விளையாட்டு பயிற்சிகள் பெற்று வரும் மாணவ, மாணவியருக்கு சீருடைகள், காலணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் ஆகியவற்றை, கலெக்டர் வழங்கினார்.
01-Feb-2025