உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் சொர்ணவாரி பருவத்திற்கு 46 நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

செங்கையில் சொர்ணவாரி பருவத்திற்கு 46 நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

செங்கல்பட்டு:சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வந்துள்ளதால், செங்கல்பட்டு மாவட்டத்தில் , தற்காலிகமாக 46 இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கியது. இதையடுத்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு, 2,545 ரூபாயும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,500 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், நெல் பயிரிடப்பட்டுள்ள பரப்பளவிற்கு, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சிட்டா, அடங்கல் பெற்று, கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில், தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யலாம். இதையடுத்து, 46 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கி, கலெக்டர் சினேகா, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதன்படி மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம் கரியச்சேரி கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று துவக்கி வைத்தார். இதில், கலெக்டர் சினேகா, சப் - கலெக்டர் மாலதி ஹெலன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் குணசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விபரம்

* அச்சிறுபாக்கம் வட்டாரம் செண்டிவாக்கம், கொங்கரை மாம்பட்டு, மோகல்வாடி, வெள்ளப் புத்துார், எல்.எண்டத்துார் * மதுராந்தகம் வட்டாரம் பூதுார், வில்வராயநல்லுார், வீராணக்குன்னம், கிணார், படாளம், அரியனுார், பிலாப்பூர், கள்ளபிரான்புரம், வேடவாக்கம், தொன்னாடு, எல்.என்.புரம் * சித்தாமூர் வட்டாரம் புத்திரன்கோட்டை, கயப்பாக்கம் * பவுஞ்சூர் வட்டாரம் செம்பூர், அம்மனுார், நீலமங்கலம், தண்டரை, பரமேஸ்வரமங்கலம் * திருக்கழுக்குன்றம் வட்டாரம் நத்தம்கரியச்சேரி, நெரும்பூர், தத்தளூர், வெள்ளப்பந்தல், பெருமாளேரி, ஆயப்பாக்கம், நல்லாத்துார், நடுவக்கரை, விட்டிலா புரம், அட்டவட்டம், பாக்கம், மணப்பாக்கம், சாலுார், பொன்பதர் கூடம், கீரப்பாக்கம் * திருப்போரூர் வட்டாரம் வெண்பேடு, முள்ளிப்பாக்கம், சின்னவிப்பேடு, சிறுகுன்றம், ராயல்பட்டு, ஒரகடம் * காட்டாங்கொளத்துார் குறுவட்டம் களிவந்தபட்டு, வில்லியம்பாக்கம் விவசாயிகள் புகார் அளிக்க முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் 044 - 27420071 மேலாண்மை இயக்குநர் அலுவலகம் இலவசம் 18005993540 கட்டுப்பாட்டு அறை 044 -- 26421663-, 26421665


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ