உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புலிப்பாக்கத்தில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து

புலிப்பாக்கத்தில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி, நேற்று காலை 11:00 மணியளவில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 'எய்ச்சர்' சரக்கு வாகனம் ஒன்று சென்றது. புலிப்பாக்கம் அருகே சென்ற போது, சரக்கு வாகன ஓட்டுநர் திடீரென 'பிரேக்' பிடித்துள்ளார். இதனால், பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரி, சரக்கு வாகனத்தின் பின்பக்கம் மோதியது. அதன் பின்னால் வந்த இரண்டு கார்கள், லாரி என, அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் ஒன்றன் பின் அடுத்தடுத்து மோதின. இதில், ஐந்து வாகனங்களின் முன்பகுதி மற்றும் பின்பகுதிகள் சேதமாகின. கார்களில் பயணித்தவர்கள், சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக, திருச்சி - - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், இந்த விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !