உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கந்தசுவாமி கோவிலில் 54 திருமணங்கள்

கந்தசுவாமி கோவிலில் 54 திருமணங்கள்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விசேஷ நாட்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும்.அந்த வகையில், முகூர்த்த நாளான நேற்று கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.கோவிலில் முன்பதிவு செய்யப்பட்ட 54 திருமணங்கள் நடைபெற்ற நிலையில், முன்பதிவு செய்யாமல் பலரும் திருமணம் செய்தனர்.இதேபோல், மற்ற இடங்களில் திருமணம் முடித்தோரும் கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், வழக்கமாக கோவிலுக்கு வரும் பக்தர்களும் அதிகமாக வந்திருந்தனர்.இதன் காரணமாக கோவில் வளாகத்தில் பக்தர்கள், பொதுமக்கள், திருமண தம்பதியர், அவர்களின் உறவினர்கள் என, ஏராளமானோர் குவிந்ததால், கோவில் வளாகத்தில் நெரிசல் ஏற்பட்டது.கோவிலை சுற்றி நான்கு மாட வீதிகளிலும் 10க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ள நிலையில், இந்த திருமண மண்டபங்களிலும், சுப நிகழ்வுகள் நடத்தன.இதனால், நான்கு மாட வீதிகளிலும் மக்கள் கூட்டத்துடன், வாகனங்களும் அதிகரித்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !