உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இந்திய ஓபன் கிக் பாக்சிங் 61 தமிழக வீரர்கள் பங்கேற்பு

இந்திய ஓபன் கிக் பாக்சிங் 61 தமிழக வீரர்கள் பங்கேற்பு

சென்னை, டில்லியில் நேற்று துவங்கிய, இந்திய ஓபன் கிக் பாக்சிங் போட்டியில், தமிழகத்தில் இருந்து 17 வீராங்கனையர் உட்பட, 61 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.'கேலோ இந்தியா' மற்றும் 'வாக்கோ கிக் பாக்சிங்' சார்பில், 4வது இந்திய ஓபன் சர்வதேச கிக் பாக்சிங் போட்டி, டில்லியில் நேற்று காலை துவங்கியது. சப் - ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர் ஆகிய நான்கு பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.போட்டியில், இந்திய வீரர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். தமிழ் நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், 17 வீராங்கனையர் உட்பட மொத்தம் 61 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வீரர்கள், டில்லி புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை