செங்கை மாவட்டத்தில் 20.85 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 7 லட்சம் பேர் நீக்கம்
செங்கல்பட்டு, டிச. 20- செங்கல்பட்டு மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, 20 லட்சத்து 85 ஆயிரத்து 491 வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலில் இருந்து 7 லட்சத்து 1 ஆயிரத்து 871 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, கடந்த நவ., 4ம் தேதி துவங்கி, கடந்த 14ம் தேதி நிறைவடைந்தது. ஏற்கனவே இருந்த 27 லட்சத்து 87 ஆயிரத்து 362 வாக்காளர்களுக்கு படிவம் அளிக்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டது. இந்நிலையில், ஏழு சட்டசபை தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல், நேற்று வெயிடப்பட்டது. இதில், ஆண்கள் 10 லட்சத்து 22 ஆயிரத்து 756, பெண்கள் 10 லட்சத்து 62 ஆயிரத்து 381, மூன்றாம் பாலினத்தவர் 354 பேர் என, மொத்தம், 20 லட்சத்து 85 ஆயிரத்து 491 வாக்காளர்கள் உள்ளனர். இறந்தவர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 565, கண்டறியப்படாதவர்கள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 461, இடம் பெயர்ந்தவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 594, இரட்டை பதிவு 23 ஆயிரத்து 736, இதர வகையில் 2,515 பேர் என, மொத்தம் 7,01,871 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஏழு சட்டசபை தொகுதிகளிலும், புதிதாக 244 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. வாக்காளர் பட்டில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய், தாசில்தார், தாம்பரம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரங்களில், பட்டியலை பார்வையிடலாம். விடுபட்டவர்களை சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, நேற்று துவங்கி, வரும் ஜன., 18ம் தேதி வரை, சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரிடம் நேரில் வழங்கலாம். நீக்கப்பட்ட வாக்காளர் விபரம் ஏற்கனவே இருந்த வாக்காளர்கள் 27,87,362 கண்டறிய இயலாதவர்கள் 2,28,461 இடமாற்றம் 3,36,594 இறப்பு 1,10,565 இரட்டைப்பதிவு 23,736 மற்றவை 2,515 மொத்தம் 7,01,871 வரைவு வாக்காளர் பட்டியல் சட்டசபை தொகுதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம் சோழிங்கநல்லுார் 2,37,473 2,46,445 93 4,84,011 பல்லாவரம் 1,44,545 1,50,139 28 2,94,712 தாம்பரம் 1,43,810 1,50,485 50 2,94355 செங்கல்பட்டு 1,65,322 1,73,854 56 3,39,232 திருப்போரூர் 1,32,947 1,38,981 48 2,71,976 செய்யூர் 97,351 98,492 18 1,95,861 மதுராந்தகம் 1,01,308 1,03,975 61 2,0,5,344 மொத்தம் 10,22,756 10,62,381 354 20,85,491