உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இந்தலுாரில் வெறிநாய் கடித்து 7 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

இந்தலுாரில் வெறிநாய் கடித்து 7 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

சித்தாமூர், இந்தலுார் கிராமத்தில், வெறிநாய் கடித்து, ஏழு செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. சித்தாமூர் அடுத்த இந்தலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி, 45. இவர், ஐந்து ஆண்டுகளாக செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை 9:00 மணியளவில், வழக்கம் போல மேய்ச்சலுக்குச் அழைத்துச் செல்ல, வீட்டின் அருகே உள்ள பட்டியில் இருந்து ஆடுகளை வெளியேற்றினார். அப்போது, அதிலிருந்த 12 ஆடுகளை, வெறிநாய் கடித்தது தெரிந்தது. இதில், ஏழு ஆடுகள் பலியாகி இருந்தன. ஐந்து ஆடுகள் படுகாயமடைந்து இருந்தன. தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள், உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். இதேபோல இப்பகுதியில், கடந்த 15ம் தேதி, வீரன் என்பவருக்குச் சொந்தமான ஒன்பது ஆடுகள், வெறிநாய் கடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இப்பகுதியில் வெறிநாய் கடித்து ஆடுகள் பலியாவதால், சாலையில் திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை