மேலும் செய்திகள்
காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது
27-Sep-2025
மணிமங்கலம்:மணிமங்கலம் அருகே புஷ்பகிரியில், பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து, 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இப்பகுதியில், தொடர் திருட்டு நடப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தாம்பரம் அருகே மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புஷ்பகிரி பகுதியை சேர்ந்தவர் பழனி, 46. தனியார் கட்டுமான நிறுவன ஊழியர். இவரது மனைவி தீபலட்சுமி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர். நேற்று முன்தினம், இருவரும் வேலைக்கு சென்றிருந்தனர். இவர்களது மகனும், மகளும் பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டில் விளையாடிவிட்டு, மாலையில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து, பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வீட்டிற்கு சென்ற பழனி, பீரோவை உடைத்து, அதில் இருந்த 7 சவரன் நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
27-Sep-2025