மேலும் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பலி
06-Jul-2025
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அருகே பைக்கில் சென்றவர், சாலையோரம் பஞ்சராகி நின்ற லாரியில் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 50.இவர் நேற்று வேலைக்குச் செல்வதற்காக, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிலெண்டர்' பைக்கில், மேல்மருவத்துார் நோக்கிச் சென்றார்.அப்போது, வந்தவாசி -- சோத்துப்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், ராமாபுரம் அடுத்த பாதிரி கூட்டுச்சாலை சந்திப்பு அருகே, டயர் பஞ்சரான லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.பைக்கில் வேகமாக சென்ற சங்கர், இந்த லாரியின் பின்னால் மோதியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அங்கிருந்தோர் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற மேல்மருவத்துார் போலீசார், சங்கரின் உடலை, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
06-Jul-2025