உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பைக்கில் சென்ற கொத்தனார் லாரி மோதி உயிரிழப்பு

 பைக்கில் சென்ற கொத்தனார் லாரி மோதி உயிரிழப்பு

உத்திரமேரூர்: திருமுக்கூடலில், பைக்கில் சென்ற கொத்தனார், லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உத்திரமேரூர் தாலுகா, திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 34; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கில், ஹெல்மெட் அணியாமல், பழைய சீவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருமுக்கூடல் பாலாற்று பாலத்தின்மீது சென்றபோது, பினாயூரில் இருந்து எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி, பைக் மீது மோதியது. இந்த விபத்தில், சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், சக்திவேலுக்கு முன் சென்ற பைக் மீதும் மோதிவிட்டு நிற்காமல் விரைந்தார். தகவலறிந்த சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். பின், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய லாரி ஓட்டுநரான, குருவம்மாபேட்டையைச் சேர்ந்த சங்கர், 39, என்பவரை, வடகல்பாக்கம் பகுதியில், போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ