உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் பூங்காவிற்கு புது வரவு குட்டியை ஈன்றெடுத்தது நீர் யானை

வண்டலுார் பூங்காவிற்கு புது வரவு குட்டியை ஈன்றெடுத்தது நீர் யானை

தாம்பரம்: வண்டலுார் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் நீர்யானை குட்டி ஈன்றுள்ளது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஆறு பெண், இரண்டு ஆண் என, எட்டு நீர் யானைகள் உள்ளன. இவை, தனித்தனி கூண்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நீர் யானை ஒன்று எட்டு மாத கர்ப்பத்திற்கு பின், கடந்த 6ம் தேதி ஒரு குட்டியை ஈன்றது. தாயும், குட்டியும் தனிக்கூண்டில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், கடந்த நான்கு மாதங்களில், மூன்று குட்டிகள் பிறந்துள்ளன. இந்த குட்டிகளுடன் சேர்த்து, இப்பூங்காவில், தற்போது 11 நீர் யானைகள் உள்ளன. மேலும், பூங்காவில் உள்ள காட்டு மாடு ஒன்றும் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை