மேலும் செய்திகள்
கண்ணசந்த நேரத்தில் டூ - வீலர் திருட்டு
14-Sep-2024
கூடுவாஞ்சேரி'நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில், நேற்று மாலை விஷ்ணுபிரியா நகர் அருகில், போதையில் தள்ளாடியபடி இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.அந்த சாலையில், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்களை, பெற்றோர்கள் அவர்களது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர்.அப்போது, போதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர், அவருக்கு முன்னால் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது மோதினார்.அதில், பள்ளி குழந்தைகள் பெற்றோருடன் சாலையில் விழுந்தனர். புத்தப்பை சாலையில் சிதறியது. அதை கண்டு நிற்காமல் சென்ற போதை ஆசாமி, அதற்கு முன்னால் சென்ற காரின் மீதும் மோதிவிட்டு, நிற்காமல் மீண்டும் தள்ளாடியபடி வாகனத்தை இயக்க முயற்சித்தார்.இதை பார்த்த அப்பகுதிவாசிகள், போதை ஆசாமியை விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து, எச்சரித்து அனுப்பினர்.
14-Sep-2024